இலங்கையின் இளம் ஓவியத் திறமைகளைக் கௌரவிக்கும் வகையில், 'அருணலு சித்திரம் 2025' விருது வழங்கும் விழா கடந்த மார்ச் 7ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் மிக விமரிசையாக நடைபெற்றது. நாடு முழுவதிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்ட 23,000ற்கும் மேற்பட்ட ஓவியங்களில், 465 இளம் கலைஞர்கள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சிறந்த 135 கலைஞர்களுக்கு மொத்தமாக 4.8 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிகளவிலான ஓவியங்களைச் சமர்ப்பித்த 25 பாடசாலைகளுக்கு, கலைத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் மொத்தமாக 1.2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ரொக்கப் பரிசுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.